search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்ப போட்டி"

    • மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம் பம் போட்டியில் ராமநாதபு ரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள், வாள் வீச்சு ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

    ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 29 பேர் முதல் பரிசும், 9 மாணவர்கள் இரண்டாம் பரிசும் வென்று பரிசு கோப்பையினை அள்ளினர்.

    வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாண வர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானு வேல் மற்றும் பயிற்சியா ளர்கள் திருமுருகன், ஜெய ஸ்ரீ ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    பெரியகுளம் அருகே உள்ள கல்லுப்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் தற்காப்பு ஆயுதக் கலைகள் சார்ந்த போட்டி நடைபெற்றது. பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமை வகித்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 சிலம்பாட்ட பயிற்சி அணியினர் பங்கேற்றனர்.

    தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர். அவர்களுக்கு டி.எஸ்.பி. கீதா பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி பாராட்டினார்.

    • போட்டியில் 300 பள்ளி குழந்தைகள், மாணவர்கள் உட்பட ஏராளமான சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • அதிக பதக்கங்கள் வென்ற மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சின்னக்கரையில் உள்ள பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பாரம்பரிய சிலம்பாட்ட சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருப்பூர்,சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து சுமார் 300 பள்ளி குழந்தைகள், மாணவர்கள் உட்பட ஏராளமான சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.

    சர்வதேச பாரம்பரிய சிலம்ப கலை சம்மேளன தலைவர் டாக்டர் மோகன் மற்றும் பார்க் கல்லூரி முதல்வர் சரவணன் ஆகியோர் சிலம்ப போட்டியை தொடங்கி வைத்தனர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சப்-ஜூனியர் பிரிவிலும், 11 முதல் 15 வயது வரை உள்ள மாணாக்கர்களுக்கு ஜூனியர் பிரிவிலும், 40 வயது வரை உள்ளவர்களுக்கு சீனியர் பிரிவிலும் ஒற்றை கம்பு, சிலம்பம், இரட்டை கம்பு சிலம்பம், தனித்திறமை போட்டிகள் மற்றும் சுருள்வாள் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அதிக பதக்கங்கள் வென்ற மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.நேற்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகிற நவம்பர் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என சிலம்பாட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • திருமங்கலத்தில் சிலம்ப போட்டி நடந்தது.
    • சோட்டோகான் நிறுவனர் பால்பாண்டி முன்னிலை வகித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் பள்ளியில் இந்தியன் லீ சாம்பியன் மார்சியல் ஆர்ட்ஸ் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து மாபெரும் சிலம்பம் போட்டி நடத்தின. போட்டியை மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் மணி தொடங்கி வைத்தார். சோட்டோகான் அமைப்பின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    சோட்டோகான் நிறுவனர் பால்பாண்டி முன்னிலை வகித்தார். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராம்நாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வயது அடிப்படையிலும், மாணவர்களின் தகுதியின் அடிப்படையிலும் பல்வேறு கட்ட போட்டிகளாக நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பி.கே.என். பள்ளி நிர்வாக கமிட்டியினர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைக்கான போட்டிகள் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டிக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர்மன்றதலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார்.

    பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட சிலம் பாட்ட கழக தலைவர் டாக்டர். பிரபு, துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, நமச்சி வாயம், கவுரவ தலைவர் அருள், செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஆனந்த்குமார், போட்டிகள் இயக்குனர் நாகராஜன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் கும ரேசன், டாக்டர்.திருப்பதி, மகரிஷி பள்ளிக்குழுமம் அஜய் யுக்தேஷ், அய்யப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், விசாலம் சிட்பண்ட்ஸ் உமா பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவில் விளையாட தகுதிபெறுவர் என்பது குறிபிடத்தக்கதாகும்.

    • போட்டியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பாக்கியவதி,கிஷோர் குமார் ஆகியோர் முதல் இடத்தில் வெற்றி பெற்றனர்.

    ஆலங்குளம்:

    தேசிய அளவில் கேரளா மாநிலம் கொச்சி ராஜுவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் நாடு முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.

    இதில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி பாக்கியவதி மற்றும் 7-ம் வகுப்பு மாணவன் கிஷோர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதல் இடத்தில் வெற்றி பெற்றனர். மேலும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய அளவில் பெற்ற முதல் பதக்கம் இது ஆகும்.

    • மாநில சிலம்ப போட்டியில் கமுதி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
    • மதுரையில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி சார்பில் நடந்தது.

    பசும்பொன்

    மதுரையில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தென்னாட்டு போர்க் கலைச் சிலம்பம் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள், பயிற்சியாளர் சரத்குமார் தலைமையில் பங்கேற்றனர். தனித்திறன் போட்டியில் 6 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் 2-ம் இடமும், 5 மாணவர்கள் 3-ம் இடமும் பெற்றனர். இரட்டைக் கம்பு பிரிவில் 2 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் 2-ம் இடமும் பெற்றனர்.

    • சர்வதேச சிலம்ப போட்டிக்கு திருமங்கலம் பள்ளி மாணவன் தேர்வானார்.
    • சென்னையில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்டு கேரிகிப்ட்சன்சாம் 9 வயது பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சியோன்நகரை சேர்ந்தவர்கள் ராஜசேகரன் -ரூபி. இவர்களது ஒரே மகன் கேரிகிப்ட்சன்சாம் (வயது10). இவர் திருமங்கலம் மறவன்குளத்தில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுவயது முதலே கேரிகிப்ட்சன்சாம்க்கு சிலம்பாட்டத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது தாய் மகனை சிலம்ப பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி பெற்ற கேரிகிப்ட்சன்சாம் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகளை படைத்து வருகிறார்.

    இவர் திருச்செந்தூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டி யில் 9 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்டு கேரிகிப்ட்சன்சாம் 9 வயது பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

    இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் வரும் 28-ந் தேதி நடைபெறும் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்க மாணவர் கேரிகிப்ட்சன்சாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் இருந்து மொத்தம் 8 பேர் தேர்வாகியுள்ள இந்த போட்டிக்கு மதுரை மாவட்டம் சார்பில் திருமங்கலம் மாணவர் கேரிகிப்ட்சன்சாம் மட்டுமே தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. 2-வது நாளான இன்று ஒற்றை கம்பு, தொடுமுறை உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
    • இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

    பனமரத்துப்பட்டி:

    மல்லூர் சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் சிவம் சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சியகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. 2-வது நாளான இன்று ஒற்றை கம்பு, தொடுமுறை உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

    இதன் பரிசளிப்பு விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக 5 கிராம் வெள்ளியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக தலா 4 கிராம் வெள்ளி, 3 கிராம் வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது.

    பரிசுகளை சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், , ஒன்றிய குழு உறுப்பினருமான பாரப்பட்டி சுரேஷ் குமார், மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் ஆகியோர் வழங்கினர். சிவம் சிலம்பம் அறக்கட்டளை தலைவர் வி.மதையான் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

    • தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • 1500 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    அன்னூர்,

    சிலம்ப கலையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக மாநில அளவிலான போட்டிகள் கோவையை அடுத்த கரியாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, தர்மபரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், சிலம்பம் அசோசியேஷன் ஆப் இந்தியா பொது செயலாளர் , தொழில் நுட்ப இயக்குனர் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி தலைவர், செயலாளர், தனியார் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசான், இந்துஸ்தான் ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.கோவை மாவட்ட தலைவர் கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். போட்டிகளில்,4 வயது முதல்,மழலையர், மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என 45 வயது வரையிலான இரு பாலர் பிரிவினரும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1500 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    • சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    டெல்லியில் ஸ்கூல் கேம்ஸ் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் கனிஷ்கா, நகசோன், திருமுருகன், வர்சன் ஸ்ரீ, முகேஷ், சபரி வாசன், தருண், கணேஷ்குமார், கார்த்திக்குமார், செல்லபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்,

    இந்த போட்டி ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்புசண்டை, சுருள் வாள், வாள் வீச்சு, வேல்கம்பு பிரிவுகளில் நடைபெற்றது, இதில் ஒற்றைக் கம்பு பிரிவில் மாணவர்கள் நகசோன், கார்த்திகுமார், கனிஷ்கா ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

    மாணவர் வர்சன் ஸ்ரீ, திருமுருகன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். மாணவர்கள் சபரிவாசன், முகேஷ், செல்லபாண்டி ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர்.

    இரட்டை கம்பு பிரிவில் கனிஷ்கா மற்றும் முகேஷ் மூன்றாம் பரிசு வெண்கலப் பதக்கம் வென்றனர்.மேலும் சுருள் வாள் பிரிவில் வர்சன் ஸ்ரீ 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.திருமுருகன் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

    வாள் வீச்சுப் பிரிவில் நகசோன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். கனிஷ்கா, செல்லபாண்டி ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    கம்பு சண்டை பிரிவில் நகசோன், செல்ல பாண்டி ஆகியோர் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். திருமுருகன், கணேஷ்குமார், தருண் ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    வேல்கம்பு பிரிவில் சபரி வாசன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மத்யு இம்மானுவேல் பாராட்டினார்.

    • மாநில அளவிலான சிலம்பப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் வேங்கட மங்கலத்தில் நடைபெற்றது.
    • போட்டியில் சென்னை, திருச்சி, கரூர் அரியலூர் உள்பட 17-க்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து 1,150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    திருச்சி:

    தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பாக மாநில அளவிலான சிலம்பப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் வேங்கட மங்கலத்தில் நடைபெற்றது.

    போட்டியில் சென்னை, திருச்சி, கரூர் அரியலூர் உள்பட 17-க்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து 1,150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    இப்போட்டியானது ஒற்றை கம்பு, இரட்டைக் கம்பு, கம்புச் சண்டை போன்ற ஆகிய பிரிவுகளில் இரண்டு வயது பிரிவினருக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் வீர சாய் சிலம்ப கழக வீரர், வீராங்கனைகள் 8 பேர் ஜெ.சீனிவாசன் தலைமையில் ஒற்றைக்கம்பு, மற்றும் கம்பு சண்டை போன்ற 2 பிரிவுகளிலும் பங்கேற்றனர்.

    இறுதிப் போட்டியில் இவர்கள் 5 பேர் முதல் இடத்தையும், 3 பேர் இரண்டாம் இடத்தையும், 5 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்பு விளையாட்டு கழகத்தின் தலைவர் வேணுகோபால் பரிசு வழங்கினார்.

    ×